Monday, October 17, 2005

பதிவு11: கலாம் வாழும் இந்தக் காலத்தில்




அரசாங்கம் மன்னிப்பு வழங்குவதுடன் அவர்களை சமுதாயத்தில் பயனுள்ள மனிதராக மாற்ற வேண்டும் என்று இந்திய ஜனாதிபதி பெருமதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்கள் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார்.

ஏற்கனவே சோனியா அவர்களும் நளினிக்கு மன்னிப்பு வழங்கலாம் என்று தெரிவித்து இருந்தார் என்று நினைக்கிறேன். மன்னிப்பைவிட சிறந்த தண்டனை அல்லது பாடம் எதுவும் இல்லை.

ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம், இந்தியா இலங்கைத் தமிழர்கள் உறவில் ஒரு புது அத்தியாயம் தொடங்கப்படலாம். காயம் அடைந்துள்ள இரு தரப்பு மக்களும் நடந்ததை மறந்து இரண்டு நாடுகளும் நன்மை அடைய புது வழிகளை யோசனை செய்யலாம்.

கலாம் வாழும் இந்தக் காலத்தில் நானும் வாழ்வதற்காக பெருமையும் கர்வமும் கொள்கிறேன்.


நன்றி: தினகரன்
மரண தண்டனை கைதிகள் வாழ்வில் புத்தொளி„ ராஜீவ் கொலையாளி 3 பேருக்கு மன்னிப்பு அளிக்கலாம்„ ஜனாதிபதி கலாம் அறிவுரை http://www.dinakaran.com/daily/2005/Oct/17/flash/flasnews1.html

No comments:

Post a Comment