Wednesday, November 23, 2005

சாய்பாபாவின் விழா மனது கஷ்டமாய் இருக்கிறது.பதிவு 21: சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள்- மனது கஷ்டமாய் இருக்கிறது.

நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளும், ஆத்திகத்துக்குள்ளேயே இருக்கும் மத வேறுபாடுகளும், ஒரு மத அமைப்புக்குள்ளேயே இருக்கும் சாதிப் (அல்லது உட்பிரிவுகள்) பிரிவுகளும் மனித இனம் இருக்கும் வரைக்கும் தீராதவை. இது பற்றிய விவாதங்களும் முடிவு பெறாதவை. கோவில்களில் இருக்கும் பணம் சார்ந்த அணுகுமுறைகளும் கடவுளைக் கும்பிடுவதில் புகுத்தப்பட்டுள்ள பல இடியாப்பச் சிக்கல்களும் (சாமிய இப்படிக் கும்பிடனும், இப்படி பூசை செய்யாட்டி கெட்டது... ) ,சாதீய அணுகு முறைகளும், என்னை கோவில்களில் இருந்து வெகுதூரத்தில் வைத்து விட்டன.

மேலும் கடவுள் பற்றிய எனது நம்பிக்கைகள் சிறுவயதில் இருந்த அளவிற்கு இப்போது இல்லை.எனது முயற்சிகள் தோல்வி அடைந்து அலுப்பாய் இருக்கும் போது "கடவுள் நகரத்தில்" உள்ள எல்லாக் கடவுள்களுக்கும் முருகா என்றோ, இன்சா அல்லா என்றோ, ஓ ஜீசஸ் என்றோ ஒரு தூதுவிடுவேன். மற்றவர்களை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. :-). "இன்சா அல்லா " என்ற வார்த்தை நான் குவைத்தில் வேலை பார்க்கும் போது வந்து ஒட்டிக்கொண்டது. கிறித்துவப் பள்ளிகளில் படித்ததால் ஜீசமும் , சிறுவயதில் ராணிமுத்துக் காலண்டரில் பார்த்த அழகான உருவத்தால் முருகனும மனதில் ஒட்டிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிறருக்கு உதவுவதன் மூலம் மிக எளிதாக மன அமைதியை அடைய முடிவதால் கடவுளைவிட்டு வெகுதொலைவுக்கு வந்துவிட்டேன். குழந்தைகளை நல்வழிப்படுத்த இந்த (சாப்பிடாட்டி சாமி கோச்சுக்கும் என்பது போன்ற பய முறுத்தல்களுக்கு) நம்பிக்கைகள் உதவும் என்பதற்காகவே சில சமயங்களில் கோவிலுக்குச் செல்வது உண்டு.

இன்று சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க நேர்ந்தது. சுனாமியாலும் , மழை வெள்ளத்தாலும் இன்னும் பல இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும் பல குழந்தைகளைக் கொண்ட நமது நாட்டில், இப்படி ஒரு ஆடம்பர விழா தேவையா?. பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களும் சில சினிமா நட்சத்திரங்களும் செய்யும் இந்த ஆடம்பர விழாக்களை இவர் ஏன் செய்ய வேண்டும்?
படங்கள்: தினமலர்

இவர் கடவுளா, கடவுளின் அவதாரமா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.இவரையோ அல்லது வேறு எந்த மனிதர்களியும் கடவுளாகவோ அல்லது கடவுளின் அவதாரமாகவோ நான் பார்க்கவில்லை. இவர் ஏற்கனவே செய்துள்ள ஒரு தண்ணீர்த்திட்டம் மக்களுக்கு உண்மையாக உபயோகமானது. எப்படியோ ஒரு பெரிய கூட்டமும் பணமும்,செல்வாக்கும் இவருக்கு சேர்ந்துவிட்டது. இதை நல்லமுறையில் பயன்படுத்தி மேலும் பல நல்ல திட்டங்களைச் செய்யலாமே.அதுபோல் இவர் மனது வைத்தால் பல காரியங்கள் செய்யலாம்.

பக்தர்களின் கொண்டாட்டங்கள் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. அவரை நம்புபவர்களை நான் குறைகூறவோ, அல்லது அவர்களின்ன் நம்பிக்கைகளை விமர்சிக்கவோ இல்லை. கொண்டாட்டங்கள் தேவைதான் ஆனால் கட்டவுட்டும்,அரசியல் தலைவர்களைப் போல கார் பவனியும் கொஞ்சம் என்னை வெட்கப்படவைக்கிறது. இவருக்கு முன்னோடியாக அறியப்படும் "ஸ்ரீடி பாபா" http://www.saibaba.org/ இந்த அளவுக்கு கொண்டாட்டங்களை விரும்பியவராகத் தெரியவில்லை.

சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க
http://www.dinamalar.com/photo_album/23nov2005/index.asp


பி.கு:
இவருக்கு ஆதரவாக http://www.sathyasai.org/ போன்ற எண்ணற்ற செய்தித்தளங்களும் ,இவர் செய்யும் செயல்களை விமர்சித்தும் பல செய்தித்தளங்களும் உள்ளது. இவரைப்பற்றி BBC ன் செய்திகள் பல முறை வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்டு விட்டது.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml

மேலும் இவரது முன்னாள் பக்தர்கள் பல செய்திகளை இந்த இணையத்தளதில் பதிந்துள்ளார்கள்.http://www.exbaba.com/

********************************

21 comments:

 1. There is a wealth of information in exbaba.com. Thx!

  ReplyDelete
 2. நான் நினைச்சதை அப்படியே சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 3. This is what I suppose the Indian mentality. Although, I have a SL/Indian background, this is hard to understand.

  ReplyDelete
 4. idharku dinamalar koduthirukum mukkiyathuvam innum mosam

  ReplyDelete
 5. இப்பத்தான் சாயீபாபா பெயரால் ஒரு நல்ல ஒரு விருந்து வடை,பாயாசம், லட்டுடன் சாப்பிட்டு வந்தனாக்கும்!

  சரி..நீங்கள் செல்வது மெத்தச் சரியே.. "கடவுளுக்கு" ஏன் இவ்வளவு ஆர்பாட்டம்! இதல்லாம் தெவைதானா? ஆர்பாட்டகாரர்களை நம்பாதீர்கள் அவர்களுடைய குறிக்கோள் வேற மாதிரித்தான் இருக்கும். உன்மையாக சத்தி உள்ளவர்கள் இப்படி ஆர்பாட்டம் போடமாட்டார்கள்!

  ReplyDelete
 6. //பக்தர்களின் கொண்டாட்டங்கள் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. அவரை நம்புபவர்களை நான் குறைகூறவோ, அல்லது அவர்களின்ன் நம்பிக்கைகளை விமர்சிக்கவோ இல்லை//.

  இந்த மாதிரி நாசூக்கு தாங்க நிறைய பேர கெடுக்குது., அயோக்கியன எல்லாம் சாமியாக்குது. முற்றும் துறந்த உனக்கு எதுக்கு கேக்குன்னு பட்டுன்னு கேளுங்க!!. நம்பிக்கையாம் நம்பிக்கை புண்ணாக்கு.

  ReplyDelete
 7. may be he is preparing to come to politics!!!!!!!!!

  ReplyDelete
 8. மனிதர்களை மனிதர் தெய்வமாக வணங்குவதை அதாவது தாய் தந்தை குருவைத் தவிர ஏற்காதவன் நான்
  நன்றி கல்வெட்டு

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. கல்வெட்டு, ramachandranusha@rediffmail.com க்கு ஒரு மெயில் அனுப்புங்க, ஒரு À÷ºÉø §Áð¼÷ சொல்லணும்

  ReplyDelete
 12. இப்பிடித்தான் பாருங்க ஒரு நாள் ராஜ் டிவியில் தலைவரோட ப்ரோக்கிராம் ஒன்னு பார்த்தேன். கடைசியில் லிங்கம் எடுத்தாரு பாருங்க, கிருஷ்ண பகவானையே நேரில் பார்த்தமாதிரி இருந்துச்சு. இதுல வேற என்ன கொடுமைன்னா எங்க வீட்டில் டீவிக்கு கற்பூர ஆராதனை நடக்குது. நாமத்தான் நாத்தீகம் பேசுறவங்களா எடுத்தெரிஞ்சு பேசிட்டேன் :-), இரண்டு நாள் அப்புறம் கடையிலத்தான் சாப்பிட்டு சமாளிச்சேன்.

  ReplyDelete
 13. னமலர் சில்லறை பசங்க என்று தெரியாதா? ஒரு பக்கம் பக்தியை வளப்பாங்க.
  இன்னொரு இதப்படிங்க முதல்ல என்று கூறி சினிமா நடிகர்களை கேவலமா பேசுவாங்க..

  ReplyDelete
 14. Not only Sai baba, there are lot of Human god in Hinduism. Kanchi Sankarachariyar & Kundrakudi Adikalar also worshiped. Since you worried about ONLY baba, it is pure politics. Why not write about Kundrakudi & Kanchi?

  ReplyDelete
 15. பாஸ்டன் பாலா,
  வருகைக்கு நன்றி.

  துளசிக்கா,
  //நான் நினைச்சதை அப்படியே சொல்லியிருக்கீங்க. //
  அறிவாளிகள் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்க.

  (யாருப்பா அது திட்டுரது...விடுங்கப்பா நானே என்ன பாரட்டிக்கிறேன்)

  நற்கீரன்,
  இந்த விசயம் நம்மைப் போன்ற நம்பிக்கையில்லாதவர்களுக்கு புரியாததுதான்.


  அனானிஸ்,
  //idharku dinamalar koduthirukum mukkiyathuvam innum mosam //
  ஹி..ஹி.. தினமலர் அப்படித்தான் இருக்கும். ஏதோ நம்ம வலைப்பதிவு பத்தி செய்தி வெளியிடுறாங்க. மன்னிப்போம்.

  //இப்பத்தான் சாயீபாபா பெயரால் ஒரு நல்ல ஒரு விருந்து வடை,பாயாசம், லட்டுடன் சாப்பிட்டு வந்தனாக்கும்!
  //
  நல்லா சாப்பிடுங்க :-))

  அப்படிபோடு,
  //இந்த மாதிரி நாசூக்கு தாங்க நிறைய பேர கெடுக்குது., அயோக்கியன எல்லாம் சாமியாக்குது. முற்றும் துறந்த உனக்கு எதுக்கு கேக்குன்னு பட்டுன்னு கேளுங்க!!. //

  சாந்தி..சாந்தி...அவுக அவுக நம்பிக்கை அவுகளுக்கு. நம்ம கேட்டா அவுக மாறப் போறாக. எதோ என் மனசு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அவன் அவன் 1000 ,2000 (http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html
  ) முன்னு தன்னால ஆன உதவியப் பண்றப்போ இவர மாதிரி பெரியவுக இன்னும் நிறைய உதவி /நல்லது பண்ணனும், ரொம்ப ஆடம்பரம் கூடாதுன்னு தோணுச்சு சொன்னே.


  gulf-tamilan,
  //may be he is preparing to come to politics!!!!!!!!! //

  :-))

  என்னார்,
  //மனிதர்களை மனிதர் தெய்வமாக வணங்குவதை அதாவது தாய் தந்தை குருவைத் தவிர ஏற்காதவன் நான்//

  அப்படியேதான் நானும்.


  மோகன்தாஸ்,
  //இரண்டு நாள் அப்புறம் கடையிலத்தான் சாப்பிட்டு சமாளிச்சேன்//

  எல்லா இடத்துலேயும் அப்படித்தான். வீட்டிற்குள் மாற்றம் கொண்டுவருவதே பெரும்பாடு.

  வம்பன்,
  //ஒரு பக்கம் பக்தியை வளப்பாங்க.
  இன்னொரு இதப்படிங்க முதல்ல என்று கூறி சினிமா நடிகர்களை கேவலமா பேசுவாங்க.//

  சினிமாவ விட்டால் அப்புறம் எப்படி பத்திரிக்கை நடத்துவது :-)) . இதெல்லாம் எல்லா பத்திரிக்கையிலும் சகஜமப்பா. :-))

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 16. Sai Srijith
  //Not only Sai baba, there are lot of Human god in Hinduism.//

  மனிதக் கடவுள்கள் என்று நான் யாரயும் ஒத்துக் கொள்வது இல்லை. நீங்கள் அவ்வாறு இவரை நினைப்பீர்களானல் அது உங்கள் உரிமை. நான் அது பற்றிய வாதத்திற்கு வரவில்லை. உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.

  //Kanchi Sankarachariyar & Kundrakudi Adikalar also worshiped.//

  உங்களின் வாதம் சரியே. இவர்களும் பாபா போல் ஒரு சில மக்களால் வணங்கப்படுபவர்களே. இவர்கள் மட்டுமல்ல யார் இவ்வளவு (பாபா) ஆடம்பரமாக விழாக் கொண்டாடினாலும் நான் வருத்தப் படுவேன். இருந்தாலும் குன்றக்குடி அடிகளாருக்கும் காஞ்சிமட சங்கராச்சியாருக்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளது.

  குன்றக்குடி அடிகளார் நேரடியாக களப்பணிகள் செய்பவர். மக்களின் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான சமூக மாற்றங்களை சிறு தொழிகள் மூலம் சாத்தியப் படுத்தியவர்.

  காஞ்சிமட சங்கராச்சியாரும் அப்படிச் செய்து இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

  // Since you worried about ONLY baba, it is pure politics. Why not write about Kundrakudi & Kanchi? //

  உங்களின் வருத்தம் புரிகிறது. பாபாவை மட்டும் தவறாகச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. அவர் செய்த தண்ணீர்த்திட்டம் போன்ற நல்ல செயல்களையும் குறிப்பிட்டு உள்ளேன். எல்லோர் பற்றியும் எழுதலாம் . சுனாமி, பூகம்பம் போன்ற பெரிய நிகழ்வுகள் நடந்த இந்த வருடத்தில் இப்படி ஒரு ஆடம்பர விழாவைப் பார்த்தபோது எழுந்த வருத்தமே தவிர யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.

  ReplyDelete
 17. சில நாட்களுக்கு முன் sadhayam என்பவர் தனது வலைப்பதிவில் பாபாவை தெய்வம் கிய்வம் என்று இணையத்திலேயே தோப்புகரணம் போட்டிருந்தார். நான் பின்னூட்டமாக exbabaவில் இருந்த 10 வீடியோக்களுக்கு 10 சுட்டிகள் கொடுத்திருந்தேன். அவர் அதை மாடரேஷனில் நீக்கிவிட்டார். உண்மையைச் சொல்லி நமது நம்பிக்கையை யாராவது கலைத்துவிடுவார்களோ என்கிற பயம் பக்தர்களுக்கு உள்ள வரை பாபா, குச்சி சங்கர் a.k.a. நடுப்பெரியவாள் போன்றவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். வெரைட்டியாக சொகுசு கார்கள் வைத்திருக்கும் சாய்பாபா பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை.

  ReplyDelete
 18. நியாயமான கோபம்ங்க..

  ஆனா அந்த வலைத்தளத்துல இருந்த அத்தனை பெயரும் வெளிநாட்டவர் பெயர் மாதிரி தெரிந்தது.. :-) ஒருவேளை நம்மவுங்க இன்னும் கண்ணத்தெரக்கலையோ.. ;-)

  வீட்லயே மாற்றம் சொல்றீங்க..

  இங்க நம்மாளே அவரோட படம் போட்ட மோதிரம் போட்டிருக்கா.. வீடா இருந்தாக்கூட.. கருத்து சொல்லிரலாம்.. ஆனா.. நான் :-( நல்ல வேளை. அவள கவர்ர அளவுக்கு நானும் அந்த மோதிரம் போடுற அளவுக்கு முத்திப்போகல..

  -
  செந்தில்/Senthil

  ReplyDelete
 19. //சில நாட்களுக்கு முன் sadhayam என்பவர் தனது வலைப்பதிவில் பாபாவை தெய்வம் கிய்வம் என்று இணையத்திலேயே தோப்புகரணம் போட்டிருந்தார். //

  ...என்ன கொடுமையிது...அந்த சமயத்தில் கமெண்ட் மாடரேஷனை எதிர்த்த ஒரே பதிவு அதுதான்....

  ReplyDelete
 20. yes!!
  u.r. perfectly correct
  RELIGIOUS LEADRES WERE ALWAYS
  SIMPLE
  RISHIS LIVED IN CAVES EATING DRY LEAVES
  DEVARAJAN

  ReplyDelete