Friday, October 06, 2006

வெட்கமாக இருக்கிறது :-(((

ந்தியாவில் ஒரு காஸ்மாபாலிடன் சிட்டி பெங்களூர். அதுவும் பல சாப்ட்வேர் முதலைகள் வாழும் இடம் .மன நலம் குன்றிய ஒரு சிறுவனை (11 வயது) மனம் நலம் குன்றியவன் என்பதற்காக விமானத்தில் ஏற அனுமதி மறுத்துள்ளது.

அதுவும் ஒரு படித்த இளம் அதிகாரி அவ்வாறு கூறுகிறார். :-(((

இதுபோல் எத்தனை கொடுமைகள் இன்னும் வெளியில் தெரியாதவை.

என்ன படித்தாலும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் இந்தியாவில் மனிதப் பண்புகள் பெரும்பாலனவர்களுக்கு கிடையாது என்பது உண்மை.இது பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுச் சொல்கிறேன்.

பிட்சா,பெப்சி சாப்பிடுவதிலும்,கார்-iPOD ,ஜீன்ஸ் போன்ற வஸ்தாதுகளில் வளர்ந்த நாட்டை கேள்வியே கேட்காமல் காப்பி அடிக்கும் நாம் அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளைக் கண்டுகொள்வது இல்லை.


இவை சிறு வயதில் இருந்தே ஊட்டி வளர்க்கப்பட வேண்டும்.
கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில்,புகை வண்டியில் இன்ன பிற இடங்களில் முதியோர்கள்,உடல்,மனக் குறைபாடு உள்ளவர்களுக்கு பிறர் விரும்பி உதவி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் சட்டம் வேண்டுமா?

சீ.சீ..

செய்திக்கு நன்றி:
ஊசி aka PIN
http://oosi.blogspot.com/2006/10/bangalore-airport.html

CNN - IBN வீடியோ
http://www.indiaabroad.com/video/player.php?url=http://video.tv18online.com.edgesuite.net/cnnibn/flvstore/10_2006/chennai_autism.flv







4 comments:

  1. autists களை மனநலம் குன்றியவர்கள் என்று சொல்வது தவறு.

    தமிழ்விகி பதிவு

    ReplyDelete
  2. பிரகாஷ்,
    எனக்கு அந்த சிறுவனின் பிரச்சனை autists (மதியிறுக்கம் ) சம்பந்தமானது என்று தெரியாது.
    வீடியோவில் அந்த போலீஸ் அதிகாரி சொல்லும் காரணம் "Mentally Disabled”" என்றுதான் வருகிறது. அதை வைத்துத்தான் அந்த வார்த்தை உபயோகப்படுத்தினேன்.

    தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மை. பிருதிவிராஜாக இருக்கக் கொண்டு இது போல் படம் பிடித்து வந்திருக்கிறார். அந்த அதிகாரிக்கே தெரியாமல், மறைவாக படம் எடுத்திருக்கிறார் போலிருக்கிறது. இது போல் இன்னும் எத்தனை எத்தனை விஷயங்கள் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாமலே போனதோ.

    விமான நிலையத்திலேயே இத்தனை செய்தார்கள் என்றால், அதிக interaction தேவையான ரயில்பயணங்கள் இவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?!

    ReplyDelete
  4. ஒழுக்கமின்மையும், மெத்தனமும், சுயநலமும் நம்மவர்களின் ரத்தத்தில் ஊரிய ஒன்று போல் ஆகிவிட்டது.

    பள்ளிப் பருவத்திலிருந்து இனி வரும் குழந்தைகளுக்கு நல்ல பண்பு வர வகை செய்வதே ஒரே வழி.

    கல்வெட்டு சார், எனது பதிப்பில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தில், நாரயணமூர்தியும், மன்மோகன் சிங்கும் நாட்டுக்கு நல்லது செய்யாதவர்கள் போல் கூறியுள்ளீர்கள் - அது சரியா?

    http://badnewsindia.blogspot.com/2006/10/simple.html

    ReplyDelete