Friday, April 11, 2008

நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு

ரம் குறைஞ்சுரும்...தரம் குறைஞ்சுரும்...இன்றுவரை இதுதான் இந்த நாயவாதிகளின்(நாய்களின்) கூவல்...

கல்லூரியில் நுழைந்த பின்தான் பட்டப்படிப்பிற்கான முறையான கல்வி/பாடம் ஆரம்பாமாகிறது சரியா?

எந்தப் புண்ணாக்கு கோட்டாவில் வந்தாலும் அங்கே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பாடத்திட்டம் சரியா மண்டூகங்களே?

அங்கே..

நீ எழுதப்போகும் அதே கொஸ்டின் பேப்பரைத்தானடா அவனுக்கும் தரப்போகிறார்கள்.
அவன் எழுதும் விடையையும், அதே ஆசிரியர்கள்தானடா திருத்தப்போகிறார்கள்.

அப்படி ,இருக்கையில் என்ன புண்ணாக்கு தரம் குறையும் அவன் வாங்கும் டிகிரிக்கும் நீ வாங்கும் புண்ணாக்கு டிகிரிக்கும்?

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு மட்டுமே கோட்டாவில் கொடுக்கப்படுகிறது. கல்வித் தேர்ச்சியில் சலுகை அல்ல. அதுவும் இந்த வாய்ப்பு அவனின் உரிமை , சலுகை அல்ல.

**

வர்ணாசிரம வழியில் மேல்-கீழ் பிரித்தபோது ஒன்றும் பேசாமல் பல நூறு ஆண்டுகாலம் சுக வாழ்வு வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனித உண்ணிகள் , இன்னும் பிறப்பின் வழி வரும் சமூக ஏற்றத் தாழ்வை ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் , அதே அளவுகோலில் உரிமை கொடுத்தால் , கேஸ்ட் பேஸ்டு ரிசர்வேசன் கூடாது என்கின்றனர்.

முதலில் கேஸ்டு பேஸ்டு வர்ணாசிரமத்தையும் பூணூலையும் தூக்கி எறிந்துவிட்டு சிறிதுகாலம் பீயள்ளுங்கள் அப்புறம் பேசுவோம் பொருளாதார பேஸ்டு ரிசர்வேசன்."Do not divide us" என்று கோட்டாவிற்கு கொடிபிடிப்பதற்கு முன் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்த்து கொடிபிடியுங்கள். Divide என்பது அங்கேதான் ஆரம்பித்தது.

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?
http://kalvetu.blogspot.com/2006/05/blog-post_23.html

The great OBC myth has been busted!
http://kalvetu.blogspot.com/2006/10/great-obc-myth-has-been-busted.html

The reservation debate
http://sify.com/news/fullcover.php?event_id=14206451

4 comments:

 1. http://thatstamil.oneindia.in/news/2008/04/11/india-aiims-doctors-association-to-file-appeal.html -வில் இருந்து "Kavi" என்பவரின் கருத்து இங்கு பதியப்படுகிறது தகவலுக்காக.

  மேற்கு வங்கம் காரக்புரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், "நாங்கள் எப்படி மாணவர்களைச் சேர்க்கிறோம் என்பதை வைத்து ஐ.ஐ.டி.யின் தரம் நிர்ணயிக்கப்படவில்லை. எப்படிப்பட்ட மாணவர்களைத் தயாரித்து அனுப்புகிறோம் என்பதுதான் தரத்தை நிர்ணயிக்கிறது'' என்கிறார். ஆனால், பார்ப்பன உயர்சாதி கும்பலோ, இட ஒதுக்கீடு வழங்கினாலே, உயர்கல்வி நிறுவனங்களின் தரம் தரைமட்டமாகி விடும்; திறமைக்கு எதிரான இட ஒதுக்கீடு நாட்டிற்கே எதிரானது'' எனக் கூச்சல் போடுகுறது.

  இட ஒதுக்கீடால் தரமும், திறமையும் போய்விடும் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தகுதியே இல்லாத மாணவர்கள் இந்த நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் போலவும், அவர்கள் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று பதவியில் அமர்ந்து விடுவதைப் போலவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள். இது அப்பட்டமான பொய்.

  நுழைவுத் தேர்வில் பெற வேண்டிய மதிப்பெண்களில் வழங்கப்படும் சிறிய சலுகையைத் தவிர, வேறெந்த சலுகையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தரப்படுவதில்லை. அதன்பின் எல்லா மாணவர்களுக்குமான பொது அளவுகோலின்படிதான் இவர்களும் தேர்வெழுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள்.

  ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற ""திறமையின் தீவுகள்'' எல்லாம் நிறுவப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனாலும், இந்தியா இன்றும் வறிய நாடாகத்தான் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்க முடியாமல், ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்திப் பெற்று வருகிறது.

  அப்படியென்றால் இந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொறியாளர்களில், விஞ்ஞானிகளில், மேலாண்மை நிர்வாகிகளில், நூற்றுக்குப் பத்து பேர் கூட திறமைசாலிகளாக இல்லை எனச் சொல்லலாமா? இட ஒதுக்கீடு சலுகை பெறாதவர்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம்.

  ReplyDelete
 2. எதிரிலிருந்து ஆரம்பித்தது என்பதல்ல முக்கியம்.
  இப்போது பிறப்பு வழி இடஒதுக்கீடு என்பது மீண்டும் பிரிவினைக்கே வித்திடுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

  ReplyDelete
 3. அனானி @ Friday, April 11, 2008 7:44:00 AM,

  //எதிரிலிருந்து ஆரம்பித்தது என்பதல்ல முக்கியம்.
  இப்போது பிறப்பு வழி இடஒதுக்கீடு என்பது மீண்டும் பிரிவினைக்கே வித்திடுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.//


  எது யாருக்கு முக்கியம் என்பது எதனால் யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் தீர்மானிக்க வேண்டியது நண்பரே.

  **

  பிறப்பே கேவலமாகப்பார்க்கும் நிலைமை இன்றும் உள்ளது. பார்ப்பனீயம் எல்லா நிலைகளிலும் விலக்கப்படவேண்டும் என்பதில் மாற்று இல்லை.

  ஆனால்,எதைக் கேவலமாக ஆக்கி மகிழ்ந்தார்களோ அதையே ஆயுதமாக எடுத்துத்தான் போராடமுடியும்.

  கல்வியில் சாதி வேண்டாம் என்னும் அம்பிகள், சமூகத்திலும் சாதி வேண்டாம் என்று ஏன் சொல்லமாட்டேன்றதுகள்?

  சமூகத்தில் இருக்கும் சாதிப்பிரிவினை மட்டும் இருக்கலாம், ஆனால் சாதி இட ஒதுக்கீடு மட்டும் பிரிவினையா... ?

  எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எவ்வளவு போராட்டம்?

  இவன் மணி ஆட்டும் இடத்தில் சாதி வேண்டுமாம், ஆனால் கல்வி நிலையத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாமாம். சாதியைக் கண்டுபிடித்தவனே நீதானே. வர்ணங்களுக்குச் வலுச்சேர்க்கும் கீதைதானே உனக்கு புனிதம்

  வேண்டாம் என்றால் எங்கும் வேண்டாம். வேண்டும் என்றால் எல்லா இடத்திலும் இருக்கட்டும்.

  அது என்ன நீ கோவிலில் மணியாட்ட சாதி வேண்டும் என்கிறாய், கல்வியில் சாதி ஒதுக்கீடு வேண்டாம் என்கிறாய்.

  ReplyDelete
 4. Pee alra indha paapanungalukku eda odikeetula allocation undaaa ?

  http://www.rediff.com/news/2006/may/23franc.htm

  mani

  ReplyDelete