Wednesday, September 12, 2012

பொய் சொல்லும் கலைஞர்..நீங்களுமா அய்யா?

"ன் தலைவன் உண்டு தூங்கினால் சரி.  பொதுசனம் எப்படியோ போகட்டும்.
நல்லா வேண்டும் உங்களுக்கு" என்ற ரீதியில் சொல்லுதிர்க்கும் அரசியல் அடிமைகளின் கருத்தையும் தாண்டி, கலைஞர் அவர்கள் அவரது கருத்தாக சிலவற்றைச் சொல்லியுள்ளார்.
அதை வரவேற்கிறேன். அதற்காக நன்றி.

http://tamil.oneindia.in/news/2012/09/12/tamilnadu-why-did-jayalalithaa-supported-anti-161306.html

பலமுறை முதல்வராக இருந்தவர் ஒரு பெரிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்றுவரை இருப்பவர், அவர் கண்முன் நடைபெறும் ஒரு நிகழ்வை புறந்தள்ளிவிட முடியாது.  ஆனால் அதில் அவர் சொல்லியுள்ள பொய்தான் வருத்தம் கொள்ளச் செய்கிறது.

புள்ளிவிவரப்புலியான நீங்களுமா அய்யா?  :-(((

கலைஞர் சொன்னது:
//போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப்போல இந்த அரசு நினைக்கக் கூடாது.//

மிக்க நன்றி


கலைஞர் சொன்னது:
// போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

இது பொய்.
இந்த போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை பூவுலகின் நண்பர்கள் தொகுத்துள்ளார்கள். இதில் தகவல்பிழை இருந்தால் சுட்டலாம் .

http://www.poovulagu.net/2012/01/25.html

1.கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

2.கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.

3. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

4. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் சொன்னது:
//.........., இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

எத்தனை கோடி செலவழித்தாலும் மக்கள் சொன்னதற்காக நிறுத்தப்பட்ட பல அணு உலைகளின் பட்டியல்.

http://www.poovulagu.net/2012/02/30.html

உலகின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடக்கும் போதோ ,அல்லது நடந்து முடிந்த பிறகோ ,பல அணு உலைகள் மூடப்பட்டுள்ளன .
  
அணு உலை                                        
நாடு    
மூடப்பட்ட நிலை
ரோச்டோவ்      
ரஷ்யா 
90 சதவீத வேலைகள் முடிந்திருந்த நிலையில்                        பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக 1997           -இல் நிறுத்தப்பட்டது .
மொச்சொவ்சீ
ஸ்லோவாகியா   
1994 டிசம்பரில் ஐரோப்பா முழுவதும் மக்கள் பலமாக எதிர்த்ததால் 1995 மார்ச் மாதம் அரசு ரத்து  செய்தது .
பட்டான்
பிலிப்பைன்ஸ் 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
ஸ்வட்டண்டார்ப்   
ஆஸ்திரியா 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
என்லியாவோ  
தைவான்  
96 .2 சதவீத மக்கள் எதிராக வாக்களித்ததால் ,1994 -ஆம் இரண்டு அணுஉலை வேலைகள்  நிறுத்தப்பட்டன

1 comment:

  1. கல்வெட்டு,

    நீண்ட நாட்களாயிற்று பதிவில் பார்த்து, நலமா?

    அணுசக்தியை விட மாற்று சக்திகளில் இம்முதலீட்டை போட்டிருந்தால் இதே 2000 மெ.வாட்டுக்கு மேல் உற்பத்தி செய்திருக்கலாம்.

    அணு சக்திக்கு ஆதரவு இல்லை என்றாலும் , இவ்வளவு தாமதமாக தீவிரமாக போராடியதை அன்றேசெய்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்.

    நீங்கள் பல விவரங்களை சரிப்பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்,ஆனாலும் நிரைய குத்து மதிப்பாக இருக்கிறதே.

    நினைவில் இருந்தே சொல்கிறேன், 1986 இல் தான் செர்னோபில் விபத்து என நினைக்கிறேன் ,அப்போது எல்லாம் கூடங்குளம் திட்டம் என பேச்சு வார்த்தை கூட இருந்திருக்காது பின் எப்படி 1986 இல் போராட்டம் ?

    87-88 இல் கேரளாவிற்கு என பேசி ,பின்னர் அங்கு எதிர்ப்பு கிளம்பி 88 இல் தமிழகம் பக்கம் வந்தது. எனவே போராட்டம் துவங்கி இருந்தாலும் அதன் பின்னரே.

    # அப்போது பாலபிராஜாபதி இன்ன பிறர் போராடினார்கள் என்கிறீர்கள் அவர்கள் எல்லாம் இன்னமும் உயிரோடு தானே இருக்கிறார்கள் ,ஏன் போராட்டத்தில் இல்லை.

    பாலபிராபதி அடிகள் ஆரம்பத்தில் கலந்து கொண்டு ,பின்னர் உதயகுமார் சுயலாபத்திற்காக போராட்டம் நடத்துகிரார் என சொல்லி ஒதுங்கி கொண்டது ஏன்?

    பழைய போராட்ட நிகழ்வுகளை சான்றாக காட்ட மட்டுமே ,ஆனால் அப்போதைய அணு உலை எதிர்ப்பாளர்கள் யாரையும் இப்போது சேர்க்காமல் ஒதுக்குவதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?

    ரஷ்யாவில் திட்டம் பின் வாங்கிதற்கு காரணம் பொருளாத சரிவு,

    தைவான் -சினாவின அங்கமாக உள்ள ஒரு தனி ஆட்சி பிரதேசம் ,அங்கே அரசியல் வேறு.,பிலிப்பைன்ஸ், சுலோவாக்கியா எல்லாம் வேறு பல காரணங்கள்.

    இந்தியா அந்த அணு உலையின் மூலம் , தன்னை அணுவியாபார நாடாக தகுதி உயர்த திட்டம் வைத்துள்ளது எனவே அணு உலை முதலீட்டை மட்டும் முக்கியமான ஒன்றாக சொல்ல இயலாது, பணம் போனால் போகட்டும் என சொல்ல.

    இதற்கு முந்தைய அணு சக்தி போராட்டங்கள் எல்லாம் ,ஒரு அடையாள எதிர்ப்பாக மட்டுமே. கலைஞர் தனி ஈழத்திற்காக குரல் கொடுத்தது போல , வரலாற்று ஆவணங்கள்.

    கலைஞர், ஜயலலிதா என இருவரின் ஆட்சியும் தலா 10 ஆண்டுகள் என திட்டக்காலத்தில் இருந்து இருக்கு,எனவே அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த வேலையும் நடக்கவில்லை.

    எனவே அவர்கள் எதிர்ப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதே தவறு. ஒரு மாநில அரசு ஆரம்பத்திலேயே எதிர்த்தால் எந்த திட்டமும் அம்மாநிலத்தில் துவங்காது. ஏன் எனில் intend of interest என மாநில அரசின் சார்பில் ஒரு கடித்அம் கொடுத்தால் தான் அங்கு கொண்டு வரலாமா என ஆய்வு துவங்கும். எனவே மாநில அரசின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது.

    ஒரு ஜனநாயக நாட்டில் எந்த அரசு திட்டமும் திடுக்கென துவங்கிவிடாது 1000 நடைமுறைகள் இருக்கு.இடிந்த கரை ஊராட்சியில் இருந்து ,மாநில அரசு, மின்வாரியம் சுற்று சூழல் அமைச்சகம், மத்திய அரசு என பலரும் ஒப்புதல் கொடுத்து வருவதே.

    இப்போட்ஹைய தீவிர போராட்டம் ரொம்ப தாமதமானது, இப்போவும் போராடும் முறை சரியல்ல. எனவே அரசு எந்திரம் திட்டத்தினை எளிதில் நிறைவேற்றிவிடும்.


    நான் நடைமுறை எதார்த்தம் என்ன என்பதையே சொல்கிறேன்.

    ReplyDelete